நிறைவேறிய, நிறைவேறிக் கொண்டிருக்கின்ற, நிறைவேறக்கூடிய திருக்குரானின முன்னறிவிப்புகள்
பல்வேறு இருக்கின்றன. அதில் ஒன்று:
" நூல்கள் விரிவாக
பரப்பப்படும் பொழுது " (Al
quran 81:10) என்பதாகும்.
அதாவது
ஒரு காலம் வரும் அப்போது நூல்கள் உலகம் முழுவதும் எளிதாக பரவலாக பரப்பப்படும்.
இதில் எந்தவித சிக்கலும் இருக்காது. மனிதர்கள் தான் சொல்லும் வரும் கருத்தை முழு
உலகிலும் எளிதாக நூல் வடிவில் எடுத்து கொண்டு செல்லுவார்கள் என்பதை எடுத்து
கூறுகிறது. சுமார் 1400 வருடங்களுக்கு முன்புள்ள
காலமாகிய திருக்குர்ஆன் இறங்கிய காலத்தில் ஒரு தாளில் எழுதுவதே மிகவும் அரிதான ஒரு
காரியமாக இருந்தது. மக்கள் தனது கருத்துக்களை, கவிதைகளை
ஓர் ஓலை சுவடிலும், எலும்பு துண்டுகளிலும், மரக்கட்டைகளிலும் எழுதி பதிய வைத்து வந்தனர்.
அப்படி ஒரு காலத்தில் இவ்வாறான ஒரு முன்னறிவிப்பு வருகிறது. சுப்ஹானல்லாஹ்....!
காகிதம் உருவான வரலாறு
ஒரு
நூல் வெளியிடப்படுவதற்கு முக்கிய பங்கு வகிப்பது காகிதம் ஆகும். இந்த காகிதம்
எவ்வாறு உருவானது யாரால் உருவாக்கப்பட்டது என்பதை நாம் பார்ப்போமானால் அது சீனாவை
சார்ந்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெரியவருகிறது. சீனாவைச் சேர்ந்த
"சாய்லுன்" என்பவர் தான் முதன்முதலில் தாள்களை உருவாக்கினார்.கி.பி.
இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் ஆன் அரசமரபு காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காகிதம்
கி.பி எட்டாம் நூற்றாண்டு வரை வேறு நாட்டவரால் அறியப்படவில்லை.கி.பி எட்டாம்
நூற்றாண்டில் பட்டு சாலை வழியே காகிதமுறை பரவியது.