நிறைவேறிய, நிறைவேறிக் கொண்டிருக்கின்ற, நிறைவேறக்கூடிய திருக்குரானின முன்னறிவிப்புகள்
பல்வேறு இருக்கின்றன. அதில் ஒன்று:
" நூல்கள் விரிவாக
பரப்பப்படும் பொழுது " (Al
quran 81:10) என்பதாகும்.
அதாவது
ஒரு காலம் வரும் அப்போது நூல்கள் உலகம் முழுவதும் எளிதாக பரவலாக பரப்பப்படும்.
இதில் எந்தவித சிக்கலும் இருக்காது. மனிதர்கள் தான் சொல்லும் வரும் கருத்தை முழு
உலகிலும் எளிதாக நூல் வடிவில் எடுத்து கொண்டு செல்லுவார்கள் என்பதை எடுத்து
கூறுகிறது. சுமார் 1400 வருடங்களுக்கு முன்புள்ள
காலமாகிய திருக்குர்ஆன் இறங்கிய காலத்தில் ஒரு தாளில் எழுதுவதே மிகவும் அரிதான ஒரு
காரியமாக இருந்தது. மக்கள் தனது கருத்துக்களை, கவிதைகளை
ஓர் ஓலை சுவடிலும், எலும்பு துண்டுகளிலும், மரக்கட்டைகளிலும் எழுதி பதிய வைத்து வந்தனர்.
அப்படி ஒரு காலத்தில் இவ்வாறான ஒரு முன்னறிவிப்பு வருகிறது. சுப்ஹானல்லாஹ்....!
காகிதம் உருவான வரலாறு
ஒரு
நூல் வெளியிடப்படுவதற்கு முக்கிய பங்கு வகிப்பது காகிதம் ஆகும். இந்த காகிதம்
எவ்வாறு உருவானது யாரால் உருவாக்கப்பட்டது என்பதை நாம் பார்ப்போமானால் அது சீனாவை
சார்ந்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெரியவருகிறது. சீனாவைச் சேர்ந்த
"சாய்லுன்" என்பவர் தான் முதன்முதலில் தாள்களை உருவாக்கினார்.கி.பி.
இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் ஆன் அரசமரபு காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காகிதம்
கி.பி எட்டாம் நூற்றாண்டு வரை வேறு நாட்டவரால் அறியப்படவில்லை.கி.பி எட்டாம்
நூற்றாண்டில் பட்டு சாலை வழியே காகிதமுறை பரவியது.
கி.பி
எட்டாம் நூற்றாண்டில் அரேபியர்கள் சீனாவின் மீது படையெடுத்து சென்றனர்.கி.பி.751 இல் நடந்த தாலஸ் போரில் அரேபியர் வெற்றி
பெற்றனர். அப்போது தாள்களை உருவாக்கத் தெரிந்த சிலரை அடிமைகளாக்கி தங்களுடன்
அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்தே அரேபியர்கள் தாள்கள் உருவாக்கும் கலையைக்
கற்றனர். அரேபியர்களிடமிருந்து ஐரோப்பியர் கற்று உலகெங்கும் தாள் உருவாக்கும்
கலையை பரப்பினர்.இவ்வாறு காகிதத்தின் பயன்பாடு மத்திய கிழக்கு பகுதியில் பரவியது.
கடதாசியின் பயன்பாடு, சீனாவில் இருந்து இஸ்லாமிய
உலகத்தினூடாக ஐரோப்பாவுக்கும்,
பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் (கி.பி.751), பாக்தாத்(கி.பி793)) எகிப்து(கி.பி.900), மற்றும் மொராக்கோ(கி.பி.1100) போன்ற நாடுகளுக்கு பரவியது. அங்கே 12 ஆம் நூற்றாண்டில் கடதாசி உற்பத்தி தொடங்கியது.
(ஆதாரம்: http://ta.wikipedia.org/wiki/காகிதம்)
ஆக, திருக்குர்ஆன் இறங்கி சுமார் 6 நூற்றாண்டுகளுக்கு
பிறகு உலகத்தில் பரவலாக காகிதத்தை மக்கள் பயன்படுத்த துவங்கினர். இவ்வாறு காலம்
செல்ல செல்ல, ஓரிரு காகிதங்கள் மூலமாக
தத்தமது கருத்துக்களை ஒரு குறிப்பிட்ட வட்டம் வரை சென்று கொண்டிருந்த மக்கள், காகிதத்தை தனித்தனியாக வைத்து அதை சரியான
முறையில் பாதுகாக்க முடியாமல் போய்விடுகிறது என்பதை அறிந்த மக்கள் , தமது கருத்துக்களை எழுதி இருந்த அந்த
காகிதங்களை ஒன்றிணைத்து அதாவது நூலில் கோர்த்து ஒரு நூல் வடிவில் பாதுகாத்தும்
வந்தார்கள். அதனை மக்கள் மத்தியில் எடுத்து விளம்பியும் வந்தார்கள்.
காலங்கள்
செல்ல செல்ல தனது கையால் எழுதிய நூட்களை ஒரு அச்சால் அடிக்க துவங்கினர்.
திருக்குர்ஆனின் முன்னறிவிப்பேற்கேற்ப, சுமார்
1450 ஆம் ஆண்டு ஜெர்மனியைச்
சேர்ந்த யொகான் குட்டன்பெர்க் என்பவரால் முதல் முதலில் அச்சு இயந்திரம்
கண்டுபிடிக்கப்பட்டது . முதலில் பரவலாக ஐரோப்பாக் கண்டம் முழுவதும் பயன்பாட்டுக்கு
வந்தது. பின்னர் உலகம் முழுவதும் பயன்படுத்தத் தொடங்கினர். இருந்த போதிலும் அச்சு
இயந்திரங்கள் 1900 மாவது வருடங்களில் தான் பல
நகரங்களில் புழக்கத்திற்கு வந்தன. இவ்வாறு ஒரு நூல் வடிவில் மனிதனின் கருத்துக்கள், கோட்பாடுகள் முழு உலகிலும் பரவலாக, விரைவாக பரவியது. புத்தகங்கள் படிக்கும்
பழக்கம் கணிசமான அளவுக்கு மக்களிடையே பரவ ஆரம்பித்தது
முதல்
தமிழ் புத்தகம் 1554ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் நாள் லிசுபனில் வெளியானது. அதை ஆக்கியோர்
வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ மற்றும்
தோமா த குருசு ஆகியோர் ஆவர்.
இந்தியாவில்
மட்டும் அனைத்து மொழிகளில் வெளியாகும் நாளிதழ் ,வார
இதழ், மாத இதழ் ,மொத்தம் வெளியாகும் பத்திரிக்கைகள் ஆகியவற்றின்
எண்ணிக்கை: 2001 ம் ஆண்டின் கணக்குப்படி 51,960 .
இந்தியாவின்
முதல் செய்தித்தாள் :பெங்கால் கெசட் , ஜனவரி
27 -1780
கடலில்
மிதந்து செல்லும் கப்பல்களிலே அச்சிடப்படும் வழக்கம் 1903 ஜன.1 ல்
ஆரம்பிக்கப்பட்டது . லண்டனிலிருந்து
வயர்லெஸ்
மூலம் கப்பலுக்கு செய்தி அனுப்பபட்டு அதிலேயே பிரிண்ட் ஆகி நியூயார்க் சென்று
சேரும்போது பத்திரிக்கை வினியோகிக்கப்பட்டது.
இந்த முன்னறிவிப்பின் முக்கியத்துவம்
கலியுக
காலத்தில் மக்கள் பல்வேறு குழப்பங்களிலும், வழி
கேட்டிலும் இருப்பார்கள் என்பதை இந்து வேதமும், பைபிளும், திருக்குர்ஆனும் கூறுகிறது. இந்த வேதங்களின்
அடிப்படையில் மக்களை நேர்வழி படுத்த, மக்கள்
இருக்கும் குழப்பமான நிலையை மாற்றி மக்கள் மத்தியில் சமாதானத்தை, சகோதரத்துவத்தை பரப்புவதற்குகாகமட்டுமல்லாமல், நம் மனிதர்களுக்கு ஒரே மார்க்கம்தான், ஒரு இறைவன் மட்டும்தான் எனும் கோட்பாடை முழு
உலகிலும் பரப்புவதற்கு, இறைவன் புறமிருந்து ஒருவர்
வருவார், அவரை இந்து வேதம் கல்கி
அவதாரம் என்றும், பைபிள் அவர் இயேசுவின்
இரண்டாம் வருகை என்றும், இஸ்லாம் இமாம் மஹ்தி வருகை
என்றும் கூறுகிறது. ஒரு பக்கம் நாம் சிந்தித்தோம் என்றால், இந்த மூவரும் ஒரே சமயத்தில் ஒரே போதனையை
எடுத்து கூறுவதற்கு வர முடியாது. மாறாக இந்த மூன்று பெயரையும் கொண்ட, மூவரின் பண்பை, குணத்தை
கொண்ட ஒருவரே தோன்றுவார் என்பது பல்வேறு ஆராய்ச்சி மூலமாக தெளிவாகிறது.
ஆக
வருபவர் தமது போதனையை முழு உலகிலும் சென்று பரப்ப முடியாது, மக்கள் வரைக்கும் கொண்டு செல்ல முடியாது. ஆம்
அவர் கூற விரும்பும் போதனையை முழு உலகிலும் உள்ள மக்கள் வரைக்கும் ஒரு நூல் மூலமாக
கொண்டு செல்ல முடியும். ஆகவே அவரின் வருகையின் காலத்தில் அவருகுக்காக இறைவன்
அமைத்து தரும் ஒரு வழியே இந்த "அச்சு இயந்திரம்" ஆகும். அதாவது இறைவன்
தனது அந்த அடியாருக்கு வழியை எளிதாக்கி தருவான். இதன் மூலம் உண்மையான போதனையை முழு
உலகிலும் எட்ட வைப்பான். இதனையே இந்த குர்ஆன் முன்னறிவித்துள்ளது. ஒரு அடியார்
வருவார் அவரது போதனை மிக எளிதாக,
விரைவாக
முழு உலகிலும் பரப்பப்படும் என்பதை எடுத்து காட்டுகிறது.
அந்த இறை அடியார் வந்தாயிற்று
மேலே
குறிப்பிட்டதன்படி, முழு மனித குல
சீர்திருத்தத்திற்காக ஒரு இறை அடியார் வந்தாயிற்று.
அவரது பெயர் மிர்ஸா குலாம்
அஹ்மத் (அலை) ஆகும். இவர் இந்தியாவில் உள்ள பஞ்சாப் எனும் மாநிலத்தில் காதியான்
என்ற ஊரில் அவதரித்தார். இவர் 1835
தோன்றி
1907 இல் மரணம் அடைந்தார். இவர் தன்னை காலத்தின்
சீர்திருத்த வாதி என்றும், இயேசுவின் இரண்டாம் வருகை
என்றும், கலியுகத்தில் அவதரிப்பதாக
இருந்த கிருஷ்ணர் என்று வாதித்தார். இவரது போதனையாவது, மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பரஸ்பரம்
சகோதரத்துவத்தை உருவாக்கி சமாதானத்தை சமுதாயத்தில் நிலைத்து தன்னை படைத்த அந்த
இறைவனை அடைய செய்ய வைப்பதே ஆகும். இந்த போதனையையே கிருஷ்ணர் தான் தோன்றிய
காலத்திலும், இயேசு தான் தோன்றிய
காலத்திலும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள்
தான் தோன்றிய காலத்திலும் எடுத்து கூறி வந்த போதனை ஆகும். இந்த போதனையை ஏற்காமல்
பலர் அவர்களை எதிர்த்தும், தூற்றி பேசியும் வந்தனர். ஆக, இதன் அடிப்படையில் மக்கள் இனம் கண்டு
கொள்வதற்காக அவர் ஓர் இயக்கத்தை உருவாக்கினார். அதற்கு அஹ்மதிய்யா முஸ்லிம்
ஜமாஅத்" என்று பெயர் இட்டார். ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களுக்கு
ஓர் இறை அறிவிப்பு இவ்வாறு வந்தது,
"நான்
உனது பிரச்சாரத்தை பூமியின் எல்லை வரை எட்ட வைப்பேன்" என்பதாகும். இந்த இறை
அறிவிப்பின் படி, இன்று இந்த இயக்கம் சுமார் 206 நாடுகளில் ஒரு தலமையின் கீழ் செயல்பட்டு அவரின்
போதனையை முழு உலகிலும் நூல் வடிவத்திலும், பிரசுரம்
வடிவத்திலும் பரப்பி வருகின்றது. இந்த வழியை திருக்குர்ஆனில் கூறிய படி, அன்னாருக்கு அறிவித்த முன்னறிவிப்பு படியும்
அந்த இறைவனே எளித்தாக்கி வைத்தான்,
வைத்தும்
வருகின்றான்.
ஹஸ்ரத்
மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் காலத்தில் அன்னாரின்
மூலமாக வெளியிடப்பட்ட ஒரு இதழ் நூற்றாண்டுகளைக் கண்டு தொடர்ந்து வெளிவரும்
இஸ்லாமிய இதழாக
திகழ்கிறது. அதனின் பெயர் Review of Religion"
ஆகும்.
தோற்றம் :15-1-1901. அதே போன்று "அல் பதர்
:(31-10-1902) எனும் பத்திரிகையும்
வெளியிடப்பட்டது. இதை தவிர 80 க்கும் மேற்பட்ட நூல்களை
எழுதி வைத்தும் உள்ளார்கள். இதனை இன்று காதியான் எனும் ஊரில் உள்ள அச்சகம் மூலமாக
அச்சடித்து வெளியிட்டு வருகிறது. இன்னும் பல்வேறு நூட்களை முழு உலகிற்கு
வழங்கியும் வருகிறது. இது அவர்கள் தனது பிரச்சாரப் பணியை எடுத்து வைக்க மிக எளிதான
காரியமாக அமைந்தது. இன்று இந்த பணியை அவர்களின் அமைப்பு ஒரு தலமையின் கீழ்
இருந்தவாறு பரப்பி வருகின்றது. மேலும் விபரங்களுக்கு www.alislam.org , www.ahmadiyyamuslimjamaat.in
No comments:
Post a Comment