ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
"ஆம், அதனின் (குர்ஆனின்) ஈர்ப்பின் ஆற்றலினால் அரசர்கள் ஏழை என்ற ஆடையை அணிந்தார்கள், பெரிய பெரிய வசதி படைத்தோர்கள் ஒன்றுமில்லாத நிலையை எடுத்து கொண்டார்கள். அதனின் அருளினால் இலட்சக்கணக்கான படிக்காதவர்கள், முதிர்ந்த பெண்கள் மிக ஆர்வத்தை கொண்ட ஈமானுடன் காலம் கடந்து சென்றிருக்கிறார்கள். இந்த பணியை இந்த ஒரு கப்பலே செய்து காண்பித்தது. இதுவே பல்வேறு கணக்கான மக்களை படைப்பினங்களை வணங்குவதிலிருந்து, தவறான எண்ணங்களை எண்ணுவதிலிருந்தும் நீக்கி ஏகத்துவம் என்ற கரை மற்றும் வலுவான நம்பிக்கை வரை அடைய செய்தது. அதுவே இறுதி மூச்சு வரை நண்பனாகவும், கவலைக்குரிய நேரத்தில் உதவக்கூடியதாகவும் இருக்கிறது." (பராஹீனே அஹ்மதிய்யா பக்கம் 164 பாகம் 1)

திருக்குர்ஆன் மொழியாக்கம்

"அல்ஹம்துலில்லாஹ் சும்ம அல்ஹம்துலில்லாஹ், அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் தரப்பில் இன்று வரை சுமார் 73 மொழிகளில் திருக்குர்ஆன் இறைவன் அருளால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது." எந்தெந்த மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய; கிளிக் செய்யவும்.

Monday, June 23, 2014

இயேசுவைப் பற்றி திருக்குர்ஆன் என்ன கூறுகிறது?

'இயேசுவைப் பற்றி திருக்குரானில் கூறப்பட்டிருக்கிறது' என கிருஸ்தவ போதகர்கள், முஸ்லிம்களிடையே பிரச்சாரம் செய்து வரும் இந்நாட்களில், இயேசுவை பற்றியும் இக்கால கிறிஸ்தவர்களின் நம்பிக்கைப்பற்றியும் திருக்குர்ஆன் என்ன கூறி இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தி அது எந்த வகையில் பைபிளுடன் ஒத்துப்போகிறது என்பதை விளக்கிட விரும்புகிறோம்.
"எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்" (1 தெசலோனி 5:21) என்ற பைபிளின் போதனைக்கிசைய இக்கருத்துக்களை கிருஸ்தவ நண்பர்கள் நடு நிலை நின்று ஆராய்ந்து உண்மையெனக் கண்டவற்றை உளமார ஏற்றுக்கொள்ள வேண்டுகின்றோம்.
இயேசுவைப் பற்றித் திருக்குர்ஆன் "அவர் இஸ்ரவேலர்களுக்காக வந்த ஓர் இறைத் தூதர்" (ஆல-இம்ரான் : 50) என்கிறது. திருக்குரானின் இந்தக் கருத்தை பைபிளில் காணப்படும் இயேசுவின் வார்த்தைகள் எவ்வகையிலும் மறுக்கவில்லை. மாறாக, இயேசு கூறுவதை பாருங்கள், காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அன்ப்பப்பட்டேனேயன்றி, மற்றபடியல்ல" (மத்தேயு 15:24) தாம் இஸ்ரவேலர்களுக்காக மட்டும் அனுப்பப்பட்ட ஒரு தீர்க்க தரிசி என்பதை இவ்வார்த்தைகள் மூலமாக இயேசு தெளிவுபடுத்துகிறார். ஒன்றான மெய் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்த்துவையும் அறிவதே நித்திய ஜீவன்" (யோவான் 17:3) என்ற வார்த்தைகளும் இயேசு இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தீர்க்கதரிசிதான் என்பதை உறுதி செய்கின்றன.

அடுத்து, "தவ்ராத்தை (மோசேயின் நியாயப் பிரமாணத்தை) நிறைவேற்ற" இயேசு வந்தார் (ஆல- இம்ரான்: 51) என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இயேசுவும், "நியாயப் பிரமாணத்தையானாலும் தீர்க்க தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். அழிக்கிறதற்கு அல்ல நிறைவேற்றுவதற்க்கே வந்தேன்" (மத்தேயு 5:17) என்றே கூறுகிறார்.
இயேசுநாதர் யார்? அவர் எதற்காகத் தொன்றினா? என்பனப்பற்றி திருக்குர்ஆன் கூறியிருப்பதை இயேசு தமது வார்த்தைகளாலேயே உறுதி செய்திருக்கிறார். இவ்வாறிருக்க, இயேசுவை தெய்வ குமாரன் என்றும் அவர் மக்களின் பாவங்களுக்காக பலியானார் என்றும் இயேசுநாதரின் சொந்த வார்த்தைகளுக்கு முரண்பாடாக கிருஸ்தவ அன்பர்கள் நம்புவது ஏன்? இவர்களின் இந்தக் கொள்கைகளுக்கு இயேசுவின் சொந்த வார்த்தைகளிலிருந்து தகுந்த சான்றுகளைத் தந்திட இயலுமா?
இயேசு, தம்மைக் குறித்து தேவ குமாரன் என்று கூறியுள்ளார் என கிறிஸ்தவ அன்பர்கள் சொல்லலாம். எத்தன அடிப்படையில் அவ்வாறு அவர் கூறினார் என்பதை அவரே தெளிவுபடுத்தி இருக்கிறார் பாருங்கள்.
"தேவ வசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் (கர்த்தர்) சொல்லியிருக்க வேத வாக்கியமும் தவறாததாயிருக்க பிதாவினால் பரிசுத்தமக்கப் பட்டும் உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணம் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா" (யோவான் 10:35-36)
தேவ வசனத்தைப் பெருகின்றவர்களுக்கு அதாவது தீர்க்கதரிசிகளுக்கு "தேவர்கள், தேவ குமாரர்கள்" என்ற காரணப் பெயர்கள் தரப்பட்டிருக்கின்றன. வேத நூலிலும் அவ்வாறே எழுதப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தாம் தம்மை "தேவ குமாரன்" என்று கூறி கொண்டதாக இயேசு இங்குக் குறிப்பிடுகின்றார். இவ்வளவு தெளிவாக அவர் கூறியிருந்தும் அவரை, 'தேவன் பெற்றெடுத்த தேவகுமாரன்' என கிருஸ்தவ அன்பர்கள் கருதுவது தவறேயாகும்.
இயேசு தாம் ஒரு தீர்க்க தரிசி என்றே கூறியிருந்தார் என்பதற்கு அக்கால மக்களும் அவரை அவ்வாறே கருதி ஏற்றிருந்தார்கள் என்பதற்கும் பல சான்றுகள் பைபிளில் காணப்படுகின்றது. மேற்கோளாக சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றோம்.
தம்மை ஏளனப்படுத்திய, தமது ஊர்க்காரர்களை நோக்கி இயேசு கூறுவதைப் பாருங்கள்.
தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமே யன்றி வேறெங்கும் கனவீனமடையான். (மாற்கு, 6:4)
முந்தைய தீர்க்கதரிசிகளோடு தம்மை ஒப்பிட்டு இயேசு கூறுவதைப் பாருங்கள்.
சந்தோசப்பட்டு களிகூறுங்கள் பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாய் இருக்கும். உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்கள். (மத்தேயு 5:12)
முற்காலத்தில் தோன்றிய தீர்க்கதரிசிகளை மக்கள் துன்புறுத்தினார்கள். அவ்வாறே தீர்க்க தரிசியாகிய தம்மை மக்கள் துன்புறுத்துவதில் ஆட்சரியப்படுவதற்க்கில்லை என்கிறார் இயேசு!
இயேசு தேவனாகவோ, தேவகுமாரனாகவோ இருந்தால் அவர் தம்மை தீர்க்கதரிசிகளோடு ஒப்பிட்டுக் பேசுவானேன்?
அடுத்து பழியை குறித்தும், பாவிகளைக் குறித்தும் இயேசு கூறுவதைப் பாருங்கள்.
"பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக் கொள்ளுங்கள்! நீதிமான்களை அல்ல பாவிகளை மனந்திரும்புகிறதர்க்கு அழைக்க வந்தேன்". (மத்தேயு 9:13)
கர்த்தர் பலியை விரும்புகிறவர் அல்ல, இரக்கத்தையே அதாவது மன்னிப்பு வழங்குவதையே விரும்புகிறார் என்பதி இயேசு உணர்த்தி இருக்கும் போது மக்களின் பாவங்களுக்காக தமது சொந்தக் குமாரனே பலியாக வேண்டுமென கர்த்தர் விரும்பினார் என்று கிருஸ்தவ போதகர்கள் கூறுவது இயேசுவின் வார்த்தைகளுக்கு முரன்பட்டதல்லவா?
நீதிமான்கள், பாவிகள் என்று மக்களை வேறு படுத்தி இயேசு கூறி இருக்கும் போது எல்லோரும் பாவிகள் என்று இவர்கள் கூருவதில் என்ன நியாயம் இருக்கிறது?
பாவிகளை மனந்திரும்புகிறதர்க்கு அழைக்க வந்தேன் என்று இயேசு சொல்லிஇருக்கும் போது அதற்க்கு முரணாக அவர் பாவிகளுக்காக பலியாக வந்தார் என்று இவர்கள் கூறுவது எவ்வகையில் சரியானது?
இரட்சிப்பிற்கு திருக்குர்ஆன் மூன்று வழிகளை கற்றுத்தருகிறது இவற்றையே இயேசுவும் போதிதிருந்தார். உறுதியான நம்பிக்கையே மனிதனை மீட்டு அவனை இறைவனின் நல்லடியானாக மாற்றும் எனத் திருக்குரான் போதிக்கின்றது. இயேசுவும் இதையே கூறுகிறார். "விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியா ஜீவன் உண்டென்றும் மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன். (யோவான் 6:47)
அடுத்து நன்னம்பிக்கை மட்டும் போதாது அதோடு இணைந்த நற்செயலும் இரட்சிப்பு பெற அவசியமானது என திருக்குர்ஆன் போதிக்கின்றது. (அல்-கஹ்ப், அல்-பத்ஹ) பைபிளும் இக்கருத்தை ஆமோதிக்கின்றது. "என் சகோதரனே!ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டு என்று சொல்லியும் கிரியை(நற்செயல்) இல்லாதவனானால் அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? (யோக்கோபு 2:14)
மூன்றாவது நம்பிக்கையும் நற்செயலும் மட்டுமல்லாது இரட்சிப்பிற்கு இறையருளும் கிடைக்கவேண்டும் என திருக்குஆன் சொல்லுகின்றது. (அல்-பத்ஹ) இதையே இயேசுவும் சொல்கிறார். "அவருடைய சீடர்கள் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து மனுஷரால் இது கூடாது தான் தேவனாலே எல்லாம் கூடும் என்றார். (மத்தேயு 19:25, 26)
இறைத் தூதராகிய இயேசு இறை மறையான திருக்குரானுக்கு ஒத்த போதனைகளையே மக்களின் இரட்சிப்பிற்காக போதித்து சென்றிருக்கிறார். இடையில் பாவி என்றும், பலி என்றும், இரத்தத்தின் வாயிலாக இரட்சிப்பு என்றும் கிருஸ்துவ போதகர்கள் குழப்பியடிப்பது ஏன்? இவர்களின் இந்தக் கொள்கைகளுக்கு இயேசுவின் சொந்த வார்த்தைகளிலிருந்து சான்றுகளைக் காட்ட தர இவர்களால் முடியுமா?
அன்பிற்குரிய கிருஸ்தவ சகோதர சகோதரிகளே சிந்திப்பீர்!
இயேசுவின் மீது யூதர்கள் அருவருக்கத்தக்க் அவதூறுகளையும் பழிச்சொற்களையும் சுமத்தி வருகிற போது திருக்குர்ஆன் அத்தகைய அவதூறுகளை மறுத்து அவரை உயர்த்தி பேசுகின்றது. இறைத்தூதர்களில் ஒருவராக விளங்குவதால் அவருடைய உண்மை நிலைக்கு திருக்குர்ஆன் சான்று பகர்கின்றது. அதே நேரத்தில் அவர் மனிதனாகப் பிறந்த ஒரு தீர்க்கதரிசி என்பதையும் அது தெளிவுபடுத்தி விடுகின்றது.
இவ்வாறிருக்க இயேசுவைப் பற்றி திருக்குரானில் கூறப்பட்டிருப்பவற்றை. தமக்கு சாதகமாக திரித்துக் கூறி பாமர முஸ்லிம்களை தமது தவறான கொள்கையின் பக்கம் திருப்ப சில கிருஸ்தவ போதகர்கள் முனைகின்றனர். இது உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போன்றது.
உண்மையில் இயேசு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னாள் வந்த ஒரு இறைத்தூதராகவும், அந்த புனித நபி பற்றி முன்னறிவிப்பு செய்கின்றவராக்கவுமே இருக்கின்றார். புனித நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி இயேசு கூறுவதைப் பாருங்கள்.
" நான் உங்களுக்கு உண்மையை சொல்லுகிறேன் நான் போகிறது உங்களுக்கு பிரயோஜனமாய் இருக்கும். நான் போகாதிருந்தால் தேற்றவாளர் உங்களிடத்தில் வரார். அவர் வந்து பாவத்தை குறித்தும், நீதியைக் குறித்தும், நியாய தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்த்வார்......சத்திய ஆவியாகிய அவர் வரும்போது சகல சத்தியத்திற்க்குள்ளும் உங்களை நடத்துவார். (யோவான் 16:7-14)
இயேசு முன்னறிவித்த தேற்றவாளரும் சத்திய ஆவியுமாகிய புனித நபிபெருமானாரை ஏற்பதும் அவர்கள் காட்டிய வழியில் நடப்பதும் இயேசுவை நேசிக்கின்ற உண்மைக் கிறிஸ்தவர்களின் கடமை அல்லவா?
இன்னொரு விஷயத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும், இயேசு -அதாவது ஈசா நபி வானத்தில் உயிருடன் இருக்கிறார் அவரே மீண்டும் வருவார் என கிறிஸ்தவர்களைப் போலவே பாமர முஸ்லிம் களும் நம்புகின்றனர். முஸ்லிம் களின் இந்த தவறான நம்பிக்கையை பயன்படுத்தி அவர்களை திசைத் திருப்ப கிருஸ்தவ பிரச்சாரகர்கள் முயலுகின்றனர். ஆனால் பாமர முஸ்லிம்களின் இந்த நம்பிக்கைக்கு திருக்குரானில் எந்த ஆதாரமும் இல்லை. இயேசுவின்- ஈசா நபியின் இயற்க்கை மரணத்தை உறுதி செய்யும் பல வசனங்கள் திருக்குரானில் காணப்படுகின்றன. (திருக்குரானில் 3:56, 3:145, 5:76, 5:117-120, 7:26)

No comments:

Post a Comment