விரிவடையும் பிரபஞ்சம்
1825 ம் ஆண்டு எட்வின் பி.ஹப்பிள் என்னும் அமெரிக்க வானியல் அறிஞர், பிரபஞ்சத்தில் நமது கேலக்ஸியைத் தவிர
பல லட்சம் உடுமண்டலங்கள் அடங்கியுள்ளன என எடுத்துக்காட்டினார் . அவை அனைத்தும் ஓரிடத்தில் நிலையாக
நிற்காமல் அதிவேகத்தில் பறந்து விலகிச் செல்கின்றன என்று கண்டறிந்தார் .
எனவே பிரபஞ்சம் விரிவடைந்து வரும் உண்மையை தற்கால அனைத்து விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்கின்றனர்
1930 ம் ஆண்டு அபிஜார்ஜ் லெமாய்திர் (பெல்ஜியம் ) என்பவர் பிரபஞ்சம்
விரிவடைதல் நிகழ்ச்சியை விளக்க 'மகா வெடிப்புக் கொள்கை ' (Big-Bang theory )
என்ற உண்மையை வெளியிட்டார் ." பல கோடி நூற்றாண்டுகளுக்கு முன்பு மிகை அடர்த்தி கொண்ட பந்தாக திகழ்ந்த பிரபஞம் இறுக்கம் தாளாமல் வெடித்து சிதறியது .அந்த பெரு வெடிப்பில் தெறித்த துண்டங்களே இன்றும் நொடிக்கு பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் வேகத்தில் விரைந்து கொண்டிருக்கின்றன. அந்த பிரபஞச துணுக்குகளிலிருந்து தான் உடுமண்டலங்களும் வின்மீன்களும் உருவெடுத்தன என்பதே இக்கொள்கையின் விளக்கம் .
நாம் வாழும் இந்த பூமி சூரியனிலிருந்து வெடித்து சிதறியதில் உருவான ஒரு துண்டு. இதை நாம் கிரகம் என்று கூறுகிறோம்..இந்த பூமி கிரகத்தை போன்று இன்னும் 8 கிரகங்கள் இந்த சூரியனிலிருந்து வெடித்து சிதறிய துண்டுகள் சூரியனை சுற்றி கொண்டு வருகின்றன. இந்த பிரபஞ்சத்தில் பல கோடி நட்சத்திர குடும்பங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திர குடும்பத்திலும் கிரகங்கள், அவைகள் ஏதிலிருந்து வெடித்து சிதறி உருவாகினவோ அதை சுற்றி கொண்டு வருகின்றன. அந்த நட்சத்திர குடும்பத்தில் ஒன்றுதான் நமது சூரிய குடும்பம். இந்த சூரிய குடும்பத்திலும் சுமார் 9 கிரகங்கள் இருக்கின்றன. இவைகள் தன்னைதானே சுற்றி கொன்று சூரியனையும் சுற்றி கொண்டு வருகின்றன.
இந்த சூரிய குடும்பத்தை பற்றி அறிவியல் வல்லுனர்கள் சொல்லும்போது, தற்போது நாம் இருக்கும் இந்த பூமி தற்போது இருக்கும் நிலைக்கு முன்பு சூரியன் அல்லது சூரியனை போன்ற ஒரு பகுதியாக இருந்தது' என்று கூறுகின்றனர். இதனை "cambridge university" வெளியிட்டுள்ளது. இவர்கள் கூறுவது, 'இந்த நட்சத்திரம் நமது நட்சத்திரத்தை சார்ந்த ஓர் "SUPER NOVA" என்று கூறுகின்றனர். அந்த சூரியன் வெடித்ததுமே ஓர் புதிய நட்சத்திர உலகம் தோன்றியது. இவ்வாறு நாம் வாழும் இந்த பூமி ஓர் தனி தோற்றத்தை அடைந்தது. பிறகு இந்த பூமியில் நீர் தோன்றியது,,,இவ்வாறு தொடர்ந்து உயிரினங்கள் உருவாகின. (the nature of the universe by fred hall, pg-69-90), The university surveyed, pg-94-109)
மேற்கண்ட விஞ்ஞாண உண்மைகளை 1400 வருடங்களுக்கு முன்னரே அல்லாஹ் தனது வேதத்தின் மூலம் முன்னறிவித்து விட்டான்.
இதை பற்றி இறைவன் குர்ஆனில் கூறும்போது இவ்வாறு கூறுகிறான்:
"வானங்களும் பூமியயுமாகிய இரண்டும் இறுக்கமாக மூடப்பட்டிருந்தன .பின்னர் நாம் அவற்றை பிரித்து திறந்து விட்டோம் " 21:31"
மேலும் இந்த பிரபஞ்சம் விரிவடைகிறது என்பதையும் தற்போதைய அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்..ஆனால் இதனை 1400 வருடங்களுக்கு முன்பாகவே குர்ஆன் இதை பற்றி கூறியுள்ளது:
குர்ஆன் கூறுகிறது:
"நாம் வானத்தை வல்லமையினால் உருவாக்கினோம் . நிச்சயமாக நாம் விரிவுபடுத்துவதற்கு ஆற்றல் பெற்றுள்ளோம் " (51:48)
இந்த ஓர் முன்னறிவிப்பை தற்போதுதான் அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால் குர்ஆன் இதனை 1400 வருடங்களுக்கு முன்பாகவே கூறிவிட்டது. இது குர்ஆனின் சிறப்பும், இந்த குர்ஆன் ஓர் மனிதன் தனது சுய ஆற்றலை கொண்டு எழுதிய நூல் அல்ல என்பதற்கு தெள்ள தெளிவான ஓர் ஆதாரமாக இருக்கின்றது.
இதில் இன்னுமொரு விஷயம் என்னவென்றால், இந்த அறிவியில் வல்லுனர்கள் வானியல் ஆராய்ச்சியை மேற்கொண்டு பல்வேறு உண்மைகளை எடுத்து கூறுவார்கள் என்பதையும் இறைவன் குர்ஆனில் முன்னறிவித்துள்ளான். அவன் கியாமத் நாளின் அடையாளங்களிலொன்றாக கூறுகிறான். அல்லாஹ் கூறுகின்றான்:
"வானத்தின் தோல் உரிக்கப்படும் போது "(81: 10)
ஆக வானத்தில் உள்ள விஷயங்களை தோல் உரித்து காட்டுவதை போல் காட்டி வருகின்றனர் இன்றய நவீன வானியல் (Astronomy) ஆராய்ச்சியாளர்கள்.
ஆக மேற்கூறப்பட்ட இவ்விஷயங்கள் மூலம், இவ்வளவு தெளிவாக 1400 வருடங்களுக்கு பிறகு நடக்கவிருக்கும் விஷயங்களை எடுத்துக் கூறும் இந்த குர்ஆன் ஓர் மனிதனால் தனது சுய ஆற்றலை கொண்டு எழுதிய நூல் அல்ல மாறாக அனைத்து விஷயங்களையும், நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கிற, இனி நடக்கவிருக்கும் அனைத்து விஷயங்களையும் அறியும் ஆற்றலை கொண்ட அந்த வல்லமை படைத்த அல்லாஹ்வே இந்த குர்ஆனை ஓர் முழுமையான மனிதன் மீது இறக்கினான் என்பதும், இதுவே குர்ஆனின் சிறப்பு மற்றும் மகிமை என்பதும் நிருபனாமாகிறது.
No comments:
Post a Comment