ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
"ஆம், அதனின் (குர்ஆனின்) ஈர்ப்பின் ஆற்றலினால் அரசர்கள் ஏழை என்ற ஆடையை அணிந்தார்கள், பெரிய பெரிய வசதி படைத்தோர்கள் ஒன்றுமில்லாத நிலையை எடுத்து கொண்டார்கள். அதனின் அருளினால் இலட்சக்கணக்கான படிக்காதவர்கள், முதிர்ந்த பெண்கள் மிக ஆர்வத்தை கொண்ட ஈமானுடன் காலம் கடந்து சென்றிருக்கிறார்கள். இந்த பணியை இந்த ஒரு கப்பலே செய்து காண்பித்தது. இதுவே பல்வேறு கணக்கான மக்களை படைப்பினங்களை வணங்குவதிலிருந்து, தவறான எண்ணங்களை எண்ணுவதிலிருந்தும் நீக்கி ஏகத்துவம் என்ற கரை மற்றும் வலுவான நம்பிக்கை வரை அடைய செய்தது. அதுவே இறுதி மூச்சு வரை நண்பனாகவும், கவலைக்குரிய நேரத்தில் உதவக்கூடியதாகவும் இருக்கிறது." (பராஹீனே அஹ்மதிய்யா பக்கம் 164 பாகம் 1)

திருக்குர்ஆன் மொழியாக்கம்

"அல்ஹம்துலில்லாஹ் சும்ம அல்ஹம்துலில்லாஹ், அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் தரப்பில் இன்று வரை சுமார் 73 மொழிகளில் திருக்குர்ஆன் இறைவன் அருளால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது." எந்தெந்த மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய; கிளிக் செய்யவும்.

Tuesday, June 17, 2014

புவி ஈர்ப்பு விசை- திருக்குர்ஆன் கூறிய மாபெரும் முன்னறிவிப்பில் ஒன்று

      
இதுதான் இறைவன் புறமிருந்து மக்களின் நேர்வழிக்காக வந்த இறைவேதம் என்பதை நாம் அறிய வேண்டுமென்றால் அந்த வேதத்தில் மனிதனின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் அதில் கூறப்பட்டிருக்க வேண்டும். அதில் வரக்கூடிய காலங்களில் நிகழவிருக்கும் சம்பவங்களை பற்றி கூறப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறான ஒரு விஷயத்தை வைத்து நாம் இந்த உலகத்திலுள்ள வேதங்களை ஆராய்ந்து பார்க்கும்போது, அதில் எது இப்போது உண்மையான வேதம் என்பதும், எந்த வேதம் பொய், எதில் மக்கள் தனது கைகளை வைத்து விளையாடியுள்ளனர் என்பதை நம்மால் அறிய முடியும். மேற்சொன்ன அளவுகோளில்  நாம் உலகத்திலுள்ள அனைத்து வேதங்களையும் அளந்து பார்க்கும்போது திருக்குர்ஆன் ஒன்றே இறைவன் புறமிருந்து வந்த வேதம் என்றும், அதில் எவரும் தனது சுய கருத்தை வைத்து திரிக்கப்படாமல் இருக்கிறது என்பதையும், அதில் நூற்றுக் கணக்கான முன்னறிவிப்புகள் நிறைந்து கிடைக்கின்றன என்பதும், அது தற்போது நிறை வெறி வருகின்றன என்பதும் தெரிய வருகின்றது.

      நாம் கீழே, திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான முன்னறிவிப்புகளில் ஓர் முன்னறிவிப்பை காண்போம்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்:
اللَّهُ الَّذِي رَفَعَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا
அல்லாஹ் வானங்களை நீங்கள் காணக்கூடிய தூண்களின்றி உயர்த்தியவனாவான் (திருக்குர்ஆன் 13 வது அதிகாரம் :3 வது வசனம்)
மேலும் கூறுகிறான்:
خَلَقَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا 
அல்லாஹ் வானங்களை நீங்கள் அவற்றைக் காண்பது போன்று  தூண்களின்றிப் படைத்துள்ளான்.” (திருக்குர்ஆன் 31 வது அதிகாரம் :11 வது வசனம்)

      வானத்துக்கும் பூமிக்கும் இடையே எந்தத் தூண்களும் இல்லை
என்பதை நாம் காண்கிறோம். வானத்தைப் பற்றிப் பேசும் போது தூண்களில்லாத வானம் என்று குறிப்பிட்டு கூறுவதுண்டு. இதனை 1400 வருடங்கள் முன்பாகவே திருக்குர்ஆனும் வேறுவிதமாக வர்ணித்து கூறியுள்ளது.
      நீங்கள் பார்க்கின்ற இந்த வானங்கள் தூண்களின்றி படைக்கப்பட்டுள்ளது என்று கூறுவதோடு 'வானங்களுக்கும், பூமிக்கும் இடையில் தூண்கள் உள்ளன; ஆனால் அவைகளைப் பார்க்க முடியாது' என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
      மனிதன் தனக்கு உயரமாக ஒரு தளத்தை உயர்த்துகிறான் என்றால் அது தன்மேல் விலாமல் இருப்பதற்காக தூண்களை அதற்கு சப்போட் கொடுக்கும் வண்ணம் எழுப்புகிறான். அவ்வாறான மக்களுக்கு தனது ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில், இந்த வசனம் இறைவன் புறமிருந்து வந்த வசனமே என்பதை மக்களுக்கு வலுவுறுத்தும் வண்ணம் தனது ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இந்த வசனத்தில் உங்கள் மேல் உயர்த்தி இருக்கிற இந்த வானம் நீங்கள் பார்க்கும் வகையிலான தூண்களே இல்லாமல் படைத்திருக்கிறான். இருந்த போதிலும் உங்கள் மேல் விலாமல் இருக்க வைத்து தனது ஆற்றலை வெளிப்படுத்துகிறான்.
      இருந்த போதிலும் நாம் இருக்கும் இடத்திற்கும் வானத்திற்கும் இடையில் ஓர் தூண் நாம் காணாத வகையில் இருக்கிறது என்பதை தெளிவுப்படுத்துகிறான்.
     
ஆமாம்…, பார்க்க முடியாத தூண்களும் இருக்கின்றனவா? என்றால் நிச்சயமாக இருக்கின்றன. உலகத்தில் இருக்கின்ற பூமி உள்ளிட்ட எல்லாக் கோள்களும் அவற்றிற்குரிய இடங்களில் நீந்துவதற்கு, அவற்றைக் குறிப்பிட்ட வேகத்துடன் இழுத்துப் பிடித்திருக்கின்ற ஒரு ஈர்ப்பு விசைதான் நம்மீது அந்த கோள்கள் விலாமல் இருப்பதற்கும், நாமும் அதன் மீது மோதாமல் இருப்பதற்கும் ஓர் தூணாக இருக்கிறது என்று கூறலாம். இந்த ஈர்ப்பு விசையின் காரணமாகத் தான் ஒவ்வொரு கோளும் அந்தரத்தில் எவ்விதப் பிடிமானமும் இன்றி தொங்குகின்ற காட்சியை நாம் தற்போது பல்வேறு வழியில் பார்க்கின்றோம்.
      இந்த ஈர்ப்பு விசை எனும் தூணை சில நூற்றாண்டுகளுக்கு முன்தான் மனிதன் கண்டறிந்தான். பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 9.25 லட்சம் கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த புவி ஈர்ப்பு விசை இருக்கின்றது என்பதை நாம் அறிவோம்.
   ஈர்ப்பு கோட்பாடின் தற்கால வேலை 16 ஆம்
நூற்றாண்டில்  கலிலியோ கலிலியால் தொடங்கப்பட்டது. அவரது புகழ்பெற்ற (எனினும் இது உறுதிப்படாத) சோதனையான பீசா கோபுரத்தில் இருந்து பந்துகளை விட்டது, பின்னர் சாய்வுகளில் பந்துகளை கவனமாக அளவிட்டதன் மூலமாக கலிலியோ ஈர்ப்பு விசை அனைத்து பொருட்களையும் ஒரே வேகத்தில் துரிதப்படுத்துகிறது என்று காட்டினார். இது அரிஸ்டாடிலின் கொள்கையான கனமான பொருட்கள் அதிகமான வேக வளர்ச்சி கொண்டவை என்பதை மாற்றியது. இலகுவான பொருட்கள் காற்றின் எதிர்ப்பினால் வளிமண்டலத்தில் மிகவும் மெதுவாக விழும் என்று கலிலியோ சரியாக சொன்னது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. கலிலியோவின் வேலை நியூட்டனின் ஈர்ப்பு விசை கோட்பாடு உருவாக உதவியது. (http://ta.wikipedia.org/wiki/ஈர்ப்பு_விசை)
      நியூட்டனின் முதல் இயக்க விதி, நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி, (நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி எனும் விதிகளை 1666லேயே நிறுவிவிட்டார்) போன்ற விதிகளைப் பற்றி நாம் அறிவோம்.
     
நியூட்டன் மூன்றாவது விதியாக அவர் கூறும் கருத்து: எதிர்ச்செயல் விசை இல்லையெனில், நம்மால் நடக்க முடியாது. நடக்கும்போது நம் கால் பாதத்தை தரையில் அழுத்துவதன் மூலம் விசையைச் செயல்படுத்துகிறோம். இதற்குச் சமமான எதிர்விசையை, தரை நம் கால்பாதத்தின் மீது செயல்படுத்துகிறது. இந்த எதிர்விசை புவிப்பரப்பிற்குச் சாய்வாக உளளது. எதிர்விசையின் செங்குத்துக் கூறு, நமது எடையை சமப்படுத்துகிறது. கிடைத்தளக்கூறு, நாம் முன்னோக்கி நடக்க உதவுகிறது.
      இவர்கள் கூறும் அனைத்து கருத்தும் ஈர்ப்பு விசையை பற்றி எடுத்து கூறுகின்றன. விசை, எதிர்விசை இவ்விரண்டும் சேர்ந்தே ஓர் சமநிலையை ஏற்படுத்துகிறது. இந்த சமநிலை இருப்பதின் காரணமாகத்தான் ஒன்று மற்றொன்றை உரசாது தன்னிடத்தில் நிலைத்திருக்கின்றன. இதனை அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறி காட்டுகிறான்: “வானங்களும்பூமியும் இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் சகிப்புத் தன்மையுடையவனாகவும்,மன்னிப்பவனாகவும்இருக்கிறான். (திருக்குர்ஆன் அதிகாரம் 35: வசனம் 41இதற்கு காரணம் ஈர்ப்பு விசையே என்பதை நிரூபித்திருக்கின்றனர்.
      ஆனால் இந்த கண்டுபிடிப்பை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறிவிட்டது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?.
      வானத்திற்கும், பூமிக்கும் எந்தத் தூண்களும் இல்லை என்று தெளிவாகத் தெரியும் போது, முஹம்மது நபியவர்கள் 'பார்க்கின்ற தூண்களின்றி' என்ற வார்த்தையைத் தேவையில்லாமல் பயன்படுத்தி இருக்க முடியாது.
      வானங்களையும், பூமியையும் படைத்தவன் பேசுகின்ற வார்த்தையாக இருப்பதால் தான் “நீங்கள் காணக்கூடிய தூண்களின்றி என்ற சொல்லைப் பயன்படுத்தி, பார்க்காத தூண்கள் இருக்கின்றன என்ற உண்மையை மறைமுகமாகக் குறிப்பிடுகிறான்.
      இந்த புவி ஈர்ப்பு விசையானது, ஒரு கோள் மற்றொரு கோளுடன் மோதாமல் இருப்பது, நாம் இந்த புவியில் சமநிலையில் நிலைக்கொண்டு நடப்பது போன்ற செயல்கள் ஓர் தொட்டிலின் பாத்திரத்தை நம்முன் கொண்டுவருகிறது.
   தொட்டிலில் நாம் இருந்து ஆடினோம் என்றால், அந்த தொட்டினால்தான் நாம் ஆடுகிறோமே தவிர நாம் தானாக ஆடவில்லை. அவ்வாறு ஆடும்போது தொட்டிலின் செயல் நமக்கு உணராது ஆனால் நாம் ஆடும் ஆட்டத்தை நம்மால் உணர முடிகிறது. இதே பாத்திரம்தான் நமக்கும் பூமிக்கும் உள்ள தொடர்பு. நாம் பூமியில் நடக்கும்போது அவை சுற்றுவதனாலும் தன்னோடு நம்மை அனைத்து வைத்திருப்பதநாலதான் நம்மால் அதன் மீது நடக்க முடிகிறது. நடக்கும்போது அந்த பூமியின் அசைவை நம்மால் உணர முடியாது, ஆனால் அதே சமயம் தொட்டிலை போன்று அந்த பூமி சுற்றுவதனாளாதான் நாம் நடக்க முடிகிறது.
      இதே போன்று தொட்டிலானது, ஒரு மையை புள்ளியை மையமாக வைத்தே ஆடுகின்றது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதே போன்றுதான் நாம் இருக்கும் பூமியும் ஓர் மையப்புள்ளியை அதவாது சூரியனை தனது மையமாக வைத்து சுற்றிக் கொண்டிருக்கிறது தொட்டிலை போல. அது (மைய) இல்லை என்றால் இது (அதாவது திடத்தின் செயல்பாடு) இல்லை. இந்த ஒரு விதியைதான் குர்ஆனில் அல்லாஹ் மிகத் தெளிவாக “பூமி ஓர் தொட்டில் போன்றது” என்று கூறியுள்ளான்.
   நாம் இன்னும் இதனை தெளிவாக விளங்கவேண்டும் என்று சொன்னால், நாம் வசிக்கும் பூமி ஒரு உருண்டை போன்ற வடிவம் கொண்டது. அதை geode  என்கிறோம்.
      இப்பொழுது நாம் பூமியின் அரைவிட்டத்தோடு ஒரு பக்கம் தொடங்கி அடுத்த பக்கம் வரை ஒரு ஓட்டை போடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். இப்போது இது பூமியின் மையத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு நீளமான பாதை. இந்த பாதை வழியே ஒருவரை இறக்கினால் அவரின் நிலை என்ன ஆகும்???? இல்லை ஏதோ ஒரு பொருள் விழுந்தால் என்ன ஆகும்??? உயிருள்ளதா, உயிர் இல்லாததா என்று புவி ஈர்ப்பு விசை பார்க்கப் போவதில்லை. அனைத்து பொருட்களின் மேலும் புவி ஈர்ப்பு விசை ஒரே மாதிரிதான் தன் ஆளுமையை செலுத்தும். 
      இந்தப் பக்கம் குதித்து அந்தப் பக்கம் வெளியே வரும் ஆசையில் நம்மில் ஒருவர் குதிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். குதித்தவுடன் பூமியின்  புவிஈர்ப்பு அவரை மையம் வரை வேகமாக இழுத்துச் செல்லும். மையம் வரை வரும் போது செயல்பட்ட நிலை ஆற்றல் (potential energy) இயக்க ஆற்றலாக (kinetic energy) மாறி மையத்தை கடந்து அவரை இழுத்துச் செல்லும்.

      அப்பாடா மையத்தை கடந்தாச்சு அந்தப் பக்கமா வெளியேறலாம்னு
நிணைக்கும் போதே மறுபடியும் புவிஈர்ப்பு அவரை மீண்டும் உள்ளே பிடித்து இழுக்கும். மறுபடியும் மையம், மறுபடியும் நிலை ஆற்றல் இயக்க ஆற்றலாக மாறி மையத்தை கடந்து அவரை இழுத்துச் சென்று ஆரம்பித்த இடத்திலேயே விடும். சரி இந்தப் பக்கமாவது வெளியே வந்திடலாம்னு தோணும். ஆனால் அதுக்கு முன் மறுபடியும் புவிஈர்ப்பு, மறுபடியும் மையம், மறுபடியும் மறுபக்க வாசல்.... இப்படி ஓர் தொட்டிலை போன்று போயிட்டு போயிட்டு வர்ரதுக்கு பெயர் தான் simple harmonic motion என்று கூறப்படுகிறது.
      இது தான் ரொம்ப நேரம் தொடரும். பிறகு படிப் படியா வேகம் குறைந்து (damped oscillations) பூமியின் நடுவில் அந்த மனிதர் நிலை கொண்டிருப்பார்.
      இந்த ஓர் நிலையை பற்றி குறிப்பிடும்போதுதான் இறைவன் திருக்குர்ஆனில் “இந்த பூமியை நாம் ஓர் தொட்டிலை போன்று அமைத்துள்ளோம்” என்று கூறுகிறான். இந்த நிலையையே நாம் மேலே உள்ள ஓர் எடுத்துக்காட்டின் மூலம் அறிந்தோம்.
      பூமியின் இந்த தொட்டில் நிலை பற்றி 1400 வருடங்களுக்கு முன்னால் உள்ள மக்கள் இதனை தெளிவாக அறிந்தார்களோ இல்லையோ, இதனை இன்று அறிவியல் வழியாக நம்மில் ஒவ்வொருவரும் மிகத் தெளிவாக அறியக்கூடியவராக இருக்கின்றோம்.
      திருக்குர்ஆன், முஹம்மது நபியின் கற்பனையல்ல; ஏக இறைவனின் கூற்றுத் தான் என்பதற்கு மற்றுமொரு சான்றாக இது அமைந்துள்ளது.   
      திருக்குர்ஆன் பல இடங்களில் (20:53, 43:10, 78:6) பூமியைத் தொட்டிலாக ஆக்கியிருப்பதாகக் குறிப்பிடுகிறது.
      ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வைத் தவிர யாரும் அவற்றை (அந்தரத்தில்) நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. திருக்குர்ஆன் 16:79
      அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றைக் கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன். திருக்குர்ஆன் 67:19, என்றும் கூறுகின்றான்.
      இதில் மிகப் பெரிய அறிவியல் உண்மை உள்ளடங்கி இருக்கிறது. பூமி தன்னைத் தானே சுற்றுவதை நாம் அறிவோம். தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் இந்தப் பூமி ஒரு வருடத்தில் வட்டமடித்து முடிக்கிறது. சூரியனைச் சுற்றுவதற்காக அது செல்கின்ற வேகம் வினாடிக்கு 250 கிலோ மீட்டர் தூரம். வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பூமி வேகமாக நகரும் போது, பூமி நகர்கின்ற திசையில் இருக்கின்ற அந்தப் பறவைகள் மீது மோத வேண்டும்.
      பூமியின் ஈர்ப்பு சக்தி ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை இருப்பதால் பூமி, அந்தப் பறவையைச் சேர்த்து இழுத்துக் கொண்டே போகிறது. முன் பக்கம் இருக்கும் பறவையை தள்ளிக் கொண்டும் பின்பக்கம் இருக்கின்ற பறவையை இழுத்துக் கொண்டும் பூமி நகர்கிறது. முன்பக்கம் பறக்கின்ற பறவையைத் தள்ளாமல் இந்தப் பூமி வேகமாகச் சென்றால் எந்தப் பறவையும் பறக்க முடியாது, பூமியில் மோதி செத்து விடும். ஆகவே பூமி தனது ஈர்ப்பு விசை வட்டத்தில் இருக்கும் பொருளை தன்னகத்தே அனைத்து வைத்திருக்கின்றன என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இதனை அல்லாஹ் 1400 வருடங்களுக்கு முன்பாகவே கூறிவிட்டான் என்பது குறிப்பிடத்தக்கது: அல்லாஹ் கூறுகின்றான்:
أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا
நாம் பூமியை உயிருள்ளவர்களையும், மரணமடைந்தவர்களையும் திரட்டி வைத்துக்கொள்ளக் கூடியதாக ஆக்கவில்லையா?(திருக்குர்ஆன் அதிகாரம் 77: வசனம் 26)
      ஆக இன்று அறிவியில் மூலமாக அதன் துணையுடன் நாம் அறிந்து கொள்ளும் விஷயங்கள் அனைத்துமே 1400 வருடங்களுக்கு முன்பாகவே அல்லாஹ் திருக்குர்ஆன் எனும் வேதத்தில் பதிவு செய்து வைத்துள்ளான். அவை அனைத்தும் இன்று நம் கண் முன்னால் நிறைவேறி கொண்டிருக்கின்றன. ஆக திருக்குர்ஆன் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது கற்பனையினாலோ அல்லது அவர்களுக்கு முன்பு தோன்றிய வேதத்தினை காப்பி அடித்து எழுத்தியுள்ளார்கள் என்று கூறுவது பொய்யே, அபத்தமானதே என்பதை இந்த முன்னறிவிப்பு செய்தி மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. இது ஓர் சாதாரண உதாரணமே, இவ்வாறு பல்வேறு முன்னறிவிப்புகள் திருக்குர்ஆனில் நிறைந்து காணப்படுகின்றன. இன்ஷா அல்லாஹ் அதனை ஒவ்வொன்றாக நாம் அடுத்து வரும் காலங்களில் பார்ப்போம்.


No comments:

Post a Comment