திருக்குரானில் 69வது அத்தியாயம் 43 முதல் 47 வரையுள்ள
வசனங்களுக்கு மௌதூதி சாஹிப் அவர்கள் செய்துள்ள தர்ஜுமாவும் அதற்க்கு அவர்
வழங்கியுள்ள வியாக்யானத்தையும் கீழே தருகிறோம். இதை இஸ்லாமிக் பௌண்டேஷன்
டிரஸ்ட்" வெளியிட்டுள்ள திருக்குர்ஆன் மூலமும்-தமிழாக்கமும் விளக்கவுரையில்
இரண்டாம் பாகத்தில் பக்கம் 576-ல் காணலாம்
"மேலும் இவர் (இந்த நபி) சுயமாக இட்டுக்கட்டி ஏதேனும் ஒரு விஷயத்தை நம் பெயரில் சேர்த்து சொல்லிருந்தால், நாம்
அவரது வலக்கரத்தைப் பிடித்திருப்போம். பிறகு அவருடைய்ய பிடரி நரம்பை
துண்டித்திருபோம். பிறகு உங்களில் எவரும் இப்படி செய்வதிலிருந்து (நம்மை)
தடுப்பவராய் இருக்க முடியாது. "
விளக்கம்: இங்கு அசல் நோக்கம் பின் வரும் கருத்தை எடுத்துரைப்பதேயாகும். "இறைத்துதருக்கு தன் தரப்பிலிருந்து வஹியில் எந்த வித கூடுதலும், குறைவும்
செய்திட அதிகாரமில்லை. அவர் அப்படி செய்தால் நாம் அவருக்கு கடும் தண்டனை
அளிப்போம்."ஆனால் இந்தக்கருத்து எத்தகைய பாணியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது
என்றால் ஓர் அரசனால் நியமிக்கப்பட்ட ஓர் அதிகாரி அந்த அரசனின் பெயரால் ஒரு
மோசடி செய்துவிடும் பொது அரசன் அவ்வதிகாரியைப்பிடித்து அவரது தலையை
கொய்துஎரியும் சித்திரம் நம் கண் முன் தீட்டப்படுகிறது. ஆனால் சிலர் இந்த
வசனத்திலிருந்து ஒருவன் தன்னை நபி என்று வாதாடி அவனது இதய நரம்பு அல்லது
கழுத்து நரம்பு அல்லாஹ்வினால் உடனே துண்டிக்கப்படாவிட்டால் அவர் ஒரு
இறைத்தூதர் என்பதற்கு ஆதாரமே இது! என்று தவறான வாதம் புரிகின்றார்கள்.
ஆனால் இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கும் கருத்து. உண்மையான
தூதரைப்பற்றியதேயாகும். நபித்துவம் பெற்றிருப்பதாக பொய்யாக வாதிடுவோர்
தமக்கு நபித்துவம் இருப்பதாக, தமக்கு இறைத்தன்மையே
இருப்பதாக வாதிடுகின்றார்கள். இவ்வாறு வாதிட்டவண்ணம் பூமியின் மீது பல
காலம் வரை நெஞ்சு நிமிர்த்தி இறுமாப்புடன் திரிகின்றார்கள். இது ஒன்றும்
அவர்களுடையா வாய்மைக்கான ஆதாரம் அல்ல!- இவ்வாறு மொழியாக்கமும், விளக்கமும் தரப்பட்டுள்ளது.