ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
"ஆம், அதனின் (குர்ஆனின்) ஈர்ப்பின் ஆற்றலினால் அரசர்கள் ஏழை என்ற ஆடையை அணிந்தார்கள், பெரிய பெரிய வசதி படைத்தோர்கள் ஒன்றுமில்லாத நிலையை எடுத்து கொண்டார்கள். அதனின் அருளினால் இலட்சக்கணக்கான படிக்காதவர்கள், முதிர்ந்த பெண்கள் மிக ஆர்வத்தை கொண்ட ஈமானுடன் காலம் கடந்து சென்றிருக்கிறார்கள். இந்த பணியை இந்த ஒரு கப்பலே செய்து காண்பித்தது. இதுவே பல்வேறு கணக்கான மக்களை படைப்பினங்களை வணங்குவதிலிருந்து, தவறான எண்ணங்களை எண்ணுவதிலிருந்தும் நீக்கி ஏகத்துவம் என்ற கரை மற்றும் வலுவான நம்பிக்கை வரை அடைய செய்தது. அதுவே இறுதி மூச்சு வரை நண்பனாகவும், கவலைக்குரிய நேரத்தில் உதவக்கூடியதாகவும் இருக்கிறது." (பராஹீனே அஹ்மதிய்யா பக்கம் 164 பாகம் 1)

திருக்குர்ஆன் மொழியாக்கம்

"அல்ஹம்துலில்லாஹ் சும்ம அல்ஹம்துலில்லாஹ், அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் தரப்பில் இன்று வரை சுமார் 73 மொழிகளில் திருக்குர்ஆன் இறைவன் அருளால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது." எந்தெந்த மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய; கிளிக் செய்யவும்.

Wednesday, October 1, 2014

நூல்கள் விரிவாக பரப்பப்படும் பொழுது

நிறைவேறிய, நிறைவேறிக் கொண்டிருக்கின்ற, நிறைவேறக்கூடிய திருக்குரானின முன்னறிவிப்புகள் பல்வேறு இருக்கின்றன. அதில் ஒன்று: 

" நூல்கள் விரிவாக பரப்பப்படும் பொழுது " (Al quran 81:10) என்பதாகும்.

அதாவது ஒரு காலம் வரும் அப்போது நூல்கள் உலகம் முழுவதும் எளிதாக பரவலாக பரப்பப்படும். இதில் எந்தவித சிக்கலும் இருக்காது. மனிதர்கள் தான் சொல்லும் வரும் கருத்தை முழு உலகிலும் எளிதாக நூல் வடிவில் எடுத்து கொண்டு செல்லுவார்கள் என்பதை எடுத்து கூறுகிறது. சுமார் 1400 வருடங்களுக்கு முன்புள்ள காலமாகிய திருக்குர்ஆன் இறங்கிய காலத்தில் ஒரு தாளில் எழுதுவதே மிகவும் அரிதான ஒரு காரியமாக இருந்தது. மக்கள் தனது கருத்துக்களை, கவிதைகளை ஓர் ஓலை சுவடிலும், எலும்பு துண்டுகளிலும், மரக்கட்டைகளிலும் எழுதி பதிய வைத்து வந்தனர். அப்படி ஒரு காலத்தில் இவ்வாறான ஒரு முன்னறிவிப்பு வருகிறது. சுப்ஹானல்லாஹ்....!

காகிதம் உருவான வரலாறு

ஒரு நூல் வெளியிடப்படுவதற்கு முக்கிய பங்கு வகிப்பது காகிதம் ஆகும். இந்த காகிதம் எவ்வாறு உருவானது யாரால் உருவாக்கப்பட்டது என்பதை நாம் பார்ப்போமானால் அது சீனாவை சார்ந்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெரியவருகிறது. சீனாவைச் சேர்ந்த "சாய்லுன்" என்பவர் தான் முதன்முதலில் தாள்களை உருவாக்கினார்.கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் ஆன் அரசமரபு காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காகிதம் கி.பி எட்டாம் நூற்றாண்டு வரை வேறு நாட்டவரால் அறியப்படவில்லை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் பட்டு சாலை வழியே காகிதமுறை பரவியது.