ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
"ஆம், அதனின் (குர்ஆனின்) ஈர்ப்பின் ஆற்றலினால் அரசர்கள் ஏழை என்ற ஆடையை அணிந்தார்கள், பெரிய பெரிய வசதி படைத்தோர்கள் ஒன்றுமில்லாத நிலையை எடுத்து கொண்டார்கள். அதனின் அருளினால் இலட்சக்கணக்கான படிக்காதவர்கள், முதிர்ந்த பெண்கள் மிக ஆர்வத்தை கொண்ட ஈமானுடன் காலம் கடந்து சென்றிருக்கிறார்கள். இந்த பணியை இந்த ஒரு கப்பலே செய்து காண்பித்தது. இதுவே பல்வேறு கணக்கான மக்களை படைப்பினங்களை வணங்குவதிலிருந்து, தவறான எண்ணங்களை எண்ணுவதிலிருந்தும் நீக்கி ஏகத்துவம் என்ற கரை மற்றும் வலுவான நம்பிக்கை வரை அடைய செய்தது. அதுவே இறுதி மூச்சு வரை நண்பனாகவும், கவலைக்குரிய நேரத்தில் உதவக்கூடியதாகவும் இருக்கிறது." (பராஹீனே அஹ்மதிய்யா பக்கம் 164 பாகம் 1)

திருக்குர்ஆன் மொழியாக்கம்

"அல்ஹம்துலில்லாஹ் சும்ம அல்ஹம்துலில்லாஹ், அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் தரப்பில் இன்று வரை சுமார் 73 மொழிகளில் திருக்குர்ஆன் இறைவன் அருளால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது." எந்தெந்த மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய; கிளிக் செய்யவும்.

Friday, July 11, 2014

திருக்குரானும் இயேசுவும்


'இயேசுவைப் பற்றி திருக்குரானில் கூறப்பட்டிருக்கிறது' என கிருஸ்தவ போதகர்கள், முஸ்லிம்களிடையே பிரச்சாரம் செய்து வரும் இந்நாட்களில், இயேசுவை பற்றியும் இக்கால கிறிஸ்தவர்களின் நம்பிக்கைப்பற்றியும் திருக்குர்ஆன் என்ன கூறி இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தி அது எந்த வகையில் பைபிளுடன் ஒத்துப்போகிறது என்பதை விளக்கிட விரும்புகிறோம்.

"எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்" (1 தெசலோனி 5:21) என்ற பைபிளின் போதனைக்கிசைய இக்கருத்துக்களை கிருஸ்தவ நண்பர்கள் நடு நிலை நின்று ஆராய்ந்து உண்மையெனக் கண்டவற்றை உளமார ஏற்றுக்கொள்ள வேண்டுகின்றோம்.

இயேசுவைப் பற்றித் திருக்குர்ஆன் "அவர் இஸ்ரவேலர்களுக்காக வந்த ஓர் இறைத் தூதர்" (ஆல-இம்ரான் : 50) என்கிறது. திருக்குரானின் இந்தக் கருத்தை பைபிளில் காணப்படும் இயேசுவின் வார்த்தைகள் எவ்வகையிலும் மறுக்கவில்லை. மாறாக, இயேசு கூறுவதை பாருங்கள், காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அன்ப்பப்பட்டேனேயன்றி, மற்றபடியல்ல" (மத்தேயு 15:24) தாம் இஸ்ரவேலர்களுக்காக மட்டும் அனுப்பப்பட்ட ஒரு தீர்க்க தரிசி என்பதை இவ்வார்த்தைகள் மூலமாக இயேசு தெளிவுபடுத்துகிறார். ஒன்றான மெய் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்த்துவையும் அறிவதே நித்திய ஜீவன்" (யோவான் 17:3) என்ற வார்த்தைகளும் இயேசு இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தீர்க்கதரிசிதான் என்பதை உறுதி செய்கின்றன.

Tuesday, July 1, 2014

குர்ஆனில் கைவைத்து தனது உள்நோக்கத்தை வெளிப்படுத்திய கீழ்தரமான ஆலிம்களின் செயல்

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தை சார்ந்தவர்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஃபோனிற்காக வெளியிட்ட குர்ஆன் மென்பொருளில் இல்லாத எழுத்துக்களை சேர்த்துள்ளார்கள் என்று எதிரிகள் இப்போது புது பொய் புரளியை பாமர மக்கள் முன் பரப்பி அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்திற்கு எதிராக அவர்களை தூண்டி வருகின்றனர். சூரா ஆலி இம்ரானின் 7 வசனத்தில் "பில் ஹக், பில் ஹக், பில் ஹக்" என்று இல்லாத ஒரு சொல்லை இந்த காதியானிகள் தனது குர்ஆனில் சேர்த்துள்ளார்கள் என்பதே இந்த பொய் பித்தலாட்டம் செய்து தனது பொழப்பை நடத்தும் கீழ்தரமான ஆலிம்களின் செயலாகும். உண்மை எது என்பதை கீழே உள்ள படத்தை பார்த்து அறிந்து கொள்ளவும்: